வெளியானது 'சிங்கப்பெண்ணே' பாடல்: விஜய் ரசிகர்கள் குஷி

Last Modified செவ்வாய், 23 ஜூலை 2019 (22:37 IST)
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'பிகில்' திரைப்படத்தின் 'சிங்கப்பெண்ணே'
பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியானது

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் பாடல் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான், சாஷா திரிபாதி பாடிய இந்த பாடல் முதல்முறை கேட்கும்போதே அட்டகாசமாக இருப்பதாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

பெண் என்றால் இதுவரை மென்மையானவற்றுடன் ஒப்பிட்டு வந்த நிலையில் பெண்களாலும் கடுமையான பணிகளை செய்திட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பெண்ணை சிங்கத்துடன் ஒப்பிட்டு ''சிங்கப்பெண்ணே' என்ற வார்த்தையில் இந்த பாடல் தொடங்குகிறது.
இந்த பாடலின் லிரிக் வீடியோவில் விஜய், நயன்தாரா உள்பட நட்சத்திரங்களின் ஸ்டில்களும், ஏ.ஆர்.ரஹ்மான் அழகாக பாடும் ஸ்டைலும் இடம்பெற்றுள்ளது.

இந்த பாடல் வெளியான ஒருசில நிமிடங்களில் டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்களில் டிரெண்டுக்கு வந்துவிட்டது என்பதை சொல்லவே தேவையில்லை.


இதில் மேலும் படிக்கவும் :