புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (23:11 IST)

குமாரசாமி ஆட்சி கவிழ்ப்பு ஜனநாயக படுகொலையா?

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து கவிழ்ந்தது. இதுவொரு ஜனநாயக படுகொலை என்றும், ஆட்சியை கவிழ்க்க பாஜக செய்த சதி என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. உண்மையில் இது ஜனநாயக படுகொலையா?
 
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை. இரு கட்சிகளுமே 224 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் மஜத கட்சி வெறும் 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராகவும், அக்கட்சி ஆட்சியை பிடிக்கவும் மக்கள் விரும்பவில்லை என்பதால்தான்  அக்கட்சிக்கு வெறும் 37 தொகுதிகளை மக்கள் அளித்துள்ளனர்.
 
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளும், பாஜக 104 தொகுதிகளும் வென்றன. ஆக மக்கள் முடிவு காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் மக்களின் விருப்பத்திற்கு எதிராக, மக்கள் முழுவதுமாக ஒதுக்கிய குமாரசாமியை காங்கிரஸ் கட்சி முதல்வராக்கியது. பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதால் இந்த அவசர முடிவை காங்கிரஸ் எடுத்ததுதான் ஜனநாயக படுகொலை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். எனவே குமாரசாமி தலைமையிலான ஆட்சி 425 நாட்கள் இருந்ததுதான் ஜனநாயக படுகொலையே தவிர, ஆட்சி கவிழ்ந்தது ஜனநாயக படுகொலை அல்ல என்பதே பெரும்பாலான அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.