வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (21:48 IST)

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி எதிரொலி: முதல்வர் குமாரசாமி ராஜினாமா!

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நிலையில் இந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானது.
 
இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் குமாரசாமி வழங்கினார். அவரது  ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் வாஜூபாய் வாலா அறிவித்துள்ளார். மேலும் புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்வராக குமாரசாமி தொடர ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். காபந்து முதல்வர் நிர்வாகரீதியாக எந்த முடிவுகளும் எடுக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது
 
கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, 'தற்போது நிம்மதியாக இருப்பதாகவும், உலகில் அதிக சந்தோஷமுடைய நபராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கர்நாடகாவில் 425 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது