தொடர்புடைய செய்திகள்
- விஜய்யால் எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்ப முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்
- உதயநிதிக்கு தெரிவிக்காத வாழ்த்தை துரைமுருகனுக்கு தெரிவித்தது ஏன்? ரஜினி வட்டாரம் பரபரப்பு தகவல்
- பொங்கலுக்குப் பிறகே விஜய்யின் அடுத்த படம்… அதுவரை ரசிகர்கள் பொங்கவேண்டாம்!
- சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
- ’’சிங்கம்’’ படத்தைச் சுட்டிக் காண்பித்துப் பேசிய பிரதமர் மோடி
ரஜினியால் வரவும் இல்லை செலவும் இல்லை: துடுக்கு தனமாய் பேசும் ஆர்.எஸ்.பாரதி!
ரஜினி வாழ்த்தியதால் எங்களுக்கு எந்த வரமும் வரப்போவதில்லை, செலவும் வரப்போவதில்லை என ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும் அதேபோல் பொருளாளராக டிஆர் பாலு இருவரும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக பொதுச்செயலாளராக கடந்த பல ஆண்டுகளாக க.அன்பழகன் இருந்த நிலையில் அவருடைய பதவிக்கு தற்போது துரைமுருகன் வந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் துரைமுருகனுக்கும், பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டிஆர் பாலுவிற்கும் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டார்.
இந்நிலையில் இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலுவும், துரைமுருகனும் ரஜினியின் நண்பர்கள். அதானாலேயே அவர் வாழ்த்தியுள்ளார். ரஜினி வாழ்த்தியதால் எங்களுக்கு எந்த வரமும் வரப்போவதில்லை, செலவும் வரப்போவதில்லை என பேசியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
