1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2020 (11:57 IST)

விஜய்யால் எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்ப முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

mgr vijay
கடந்த சில நாட்களாகவே தளபதி விஜய் குறித்த சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் மதுரை உள்பட ஒரு சில நகரங்களில் ஒட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜய்யை எம்ஜிஆர் போல் உருவகப்படுத்தி ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் அதிமுகவினர்களை எரிச்சலாக்கி வருகிறது 
 
எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல், இதயகணி, மதுரை மீட்ட சுந்தரபாண்டியன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் எம்ஜிஆருக்கு பதிலாக விஜய் போஸ்டர்களில் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எம்ஜிஆரின் விஜய் இடத்தை நிரப்பி விடுவார் என்றும் விஜய் தான் அடுத்த முதல்வர் என்று விஜய் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘எம்ஜிஆர், ஜெயலலிதா போல் எல்லா நடிகர்களும் ஆகிவிட முடியாது என்றும் எம்ஜிஆர் இடத்தை விஜய்யால் எந்த காலத்திலும் நிரப்ப முடியாது என்றும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது