’’சிங்கம்’’ படத்தைச் சுட்டிக் காண்பித்துப் பேசிய பிரதமர் மோடி
இன்று ஐபிஎஸ் பயிற்சி முடித்துள்ள இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பேசிய பிரதமர் மோடி, அனைத்து மொழிகளும் ஹிட் அடித்த சிங்கம் படத்தை சுட்டிக் காண்பித்துப் பேசினார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து பெரும் வெற்றி பெற்ற சிங்கம் படத்தில் மூன்று பாகங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது அனைத்து மொழிகளும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஐபிஎஸ் பயிற்சி முடித்துள்ள இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பேசிய பிரதமர் மோடி காணொலி வாயிலாக அவர்களுடம் உரையாற்றினார்.
அப்போது காக்கிச் சட்டையில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதை விட அதை அணிந்து கொள்வதில் தான் நீங்கள் பெருமை கொள்ள வேண்டுமென்பது அவசியம் என தெரிவித்துள்ளார். மேலும் சினிமாவில் சிங்கம் போன்ற படங்களைப் பார்த்துவிட்டு அதீதமாக தங்களை எண்ணாமல் உண்மையைப் புறக்கணிக்காமல் செயல்படவேண்டும் என்று அறிவுத்தியுள்ளார்.