1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. RS Bharathi says about case against annamalai

அண்ணாமலைக்கு சிறை தண்டனை நிச்சயம்: ஆர்எஸ். பாரதி

அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஓராண்டு சிறை தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக பிரமுகர் சொத்து பட்டியலை வெளியிட்ட நிலையில் திமுக தரப்பிலிருந்து அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது
 
அண்ணாமலை உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் ஆர்எஸ் பாரதி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆர் எஸ் பாரதி அவதூறு கருத்துக்களுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்காததால் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும் இந்த வழக்கில் அவருக்கு கண்டிப்பாக ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். திமுக யார் மீதும் பொய் வழக்கு போடாது என்றும் அண்ணாமலை அவதூறாக பேசியதால்தான் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் சட்ட ரீதியாக இதுவரை அண்ணாமலை எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் திமுக தொடர்ந்த அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் இந்த வழக்கிலும் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மைசூர் சாண்டல் சோப்புக்கும் முதலாம் உலகப் போருக்கும் என்ன தொடர்பு? - வியக்கவைக்கும் வரலாறு