வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 4 மே 2023 (14:47 IST)

திமுக அரசின் அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும்: அண்ணாமலை

Annamalai
திமுக அரசின் அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகச் செலவுகளுக்காக, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, கோவில்கள் வருமானத்திலிருந்து, 12% ஒதுக்கப்படுகிறது. 
 
அதற்கு மேல், கோவில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது என்பது விதி மீறலாகும். கோவில் நிதியை அறநிலையத் துறையின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றமே கூறியிருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள் பேசுகையில், கோவில் நிதியில் வாகனங்கள் வாங்கியிருக்கிறோம் என்று அந்த விதிமீறலை நியாயப்படுத்தியிருக்கிறார். 
 
அமைச்சரின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக அரசின் இத்தகைய விதிமீறல்களை எதிர்த்தே, அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்தி வருகிறோம்.
 
 
Edited by Siva