வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 3 மே 2023 (22:09 IST)

நடிகர் சரத்பாபு காலமானார்?

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரத்பாபு இன்று காலமானார்.

தமிழ் சினிமாவில் 1973 ஆம் ஆண்டு  தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன்பின்னர், தமிழில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் சரத்பாபு அறிமுகமானார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரத்பாபு தீவிர சிகிசை பெற்று வந்தார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகிறது.