வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 மே 2023 (19:36 IST)

இந்த பூச்சாண்டி எல்லாம் என்னிடம் பலிக்காது.. நீதிமன்ற வழக்கு குறித்து அண்ணாமலை பேட்டி..!

வழக்கு போட்டு மிரட்டுவது போன்ற பூச்சாண்டி எல்லாம் என்னிடம் பலிக்காது என்றும் அதை எல்லாம் யாராவது பயந்தவன் இருப்பான் அவர்களிடம் திமுக காட்டிக் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்ற வழக்கு குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்தார். 
 
தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து நீதிமன்றத்திலும் தனக்கு எதிராக வழக்குகள் தொடர்ந்தாலும் நீதிமன்றத்திற்கு சுற்றுப்பயணம் செய்வதோடு அங்குள்ள பொதுமக்களிடம் பாஜகவை வளர்ப்பேன் என்றும் பாஜகவை வளர்ப்பதற்கு எனக்கு அது ஒரு அவகாசமாக எடுத்துக் கொள்வேன் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் நீதிமன்றத்தில் மேலும் சில ஆவணங்களை நான் சமர்ப்பிப்பேன் என்றும் அதன் மூலம் அவர்களுக்கு தான் மேலும் சிக்கல் என்றும் அவர் கூறினார்.
 
இன்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சார்பில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள பல நீதிமன்றங்களிலும் அண்ணாமலை மீது வழக்கு தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran