தொடர்புடைய செய்திகள்
- அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சி.... ரூ.73,250 கோடிகள் இழப்பு !
- ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படங்கள்...ரசிகர்கள் மகிழ்ச்சி
- ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரகும் ராமாயண் படத்தில் இணையும் அவதார் குழுவினர்!
- ராமர் கோயில் நிலம்: வாங்கிய சில நிமிடங்களில் ரூ. 16 கோடி உயர்வு - புதிய சர்ச்சை
- சவரனுக்கு ரூ.240 குறைவு; சரிந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்!
ரேசன் கடைகளில் இன்று முதல் ரூ.2000 இரண்டாவது தவணை: அரசு அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் இரண்டாவது தவணை ரூபாய் 2000 வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் கடந்த 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்ற நிலையில் இன்று முதல் ரூபாய் 2000 விநியோகம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் இன்று முதல் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் டோக்கன்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தின் படி அரிசி அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் இந்த பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இம்மாத இறுதிவரை ரூபாய் 2000 மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்பதால் பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயம் இன்றி அனைவரும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ரேஷன் கடைகளில் வாங்கிய மளிகை பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
