திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (13:02 IST)

ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரகும் ராமாயண் படத்தில் இணையும் அவதார் குழுவினர்!

ரூபாய் 500 கோடியில் தயாராக இருக்கும் ராமாயண் படத்திற்காக அவதார் குழுவினர் இணைய உள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரபல நடிகர் மகேஷ் பாபு ராமராகவும் தீபிகா படுகோன் சீதையாகவும் நடிக்க இருக்கும் படத்தில் ராவணனாக ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளார். இந்தப் படம் ரூ 500 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் உள்ள இந்த படத்தில் பணிபுரிவதற்காக அவதார் பட குழுவினர் இணைந்து உள்ளதாக சற்றுமுன் தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த குழுவினர்களுக்கு மட்டும் பல கோடிகள் சம்பளம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தப் படம் இந்திய திரையுலகிலேயே மிகப்பெரிய சாதனை செய்யும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது