1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rs 2 crore collected as fine for violting lockdown

2 கோடியை தாண்டுய அபராத வசூல் தொகை!

#CoronaVirus
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,85,150 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு என காவல்துறையினர் தகவல். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.   
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   
 
இருப்பினும், மக்கள் நோய் தொற்றின் வீரியத்தை புரிந்துக்கொள்ளாமல் வெளியே சுற்றி வருகின்றனர். அப்படி ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,85,150 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்படுள்ளனர். இதுவரை 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 2,68,537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2.68 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
Sugapriya Prakash