திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (11:08 IST)

சொதப்பும் ரேபிட் டெஸ்ட்: சீன தரப்பு விளக்கம்!!

ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவுகளை காட்டுவதாக வந்த புகாருக்கு சீன நிறுவனங்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனாவைக் கண்டறியப்படும் பிசிஆர் முறை பின்பற்றப் பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களின் மூலமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 
 
ரேபிட் கிட் மூலம் பரிசோதனை மேற்கொண்டால் 6 முதல் 71 சதவீதம் வரை மாறுபட்ட முடிவுகள் காட்டுவதாக சில மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் புதிதாக வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களை அடுத்து இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது. 
 
தவறான முடிவுகள காட்டும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் எப்போது பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டன் அரசும் இதே புகாரை முன்வைத்துள்ளது. 
 
எனவே, சீன நிறுவனங்கள் தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருக்கு கூடுதலாக பரிசோதனை செய்யவே ரேபிட் டெஸ்ட் கருவியை பயன்படுத்த வேண்டும்.
 
பிற நாடுகளில் பயன்படுத்தும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே, இந்த கருவிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு தேவையான மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சீனாவில் ஆல் டெஸ்ட் பயோடெக் மற்றும் வொண்ட்ஃபோ பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்கள் ரேபிட் டெஸ்ட் கருவிகளை உற்பத்தி செய்கின்றன என்பது கூடுதல் தகவல்.