1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2020 (13:04 IST)

பஞ்சாயத்துக்கு வந்த அமித்ஷா: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!!

மருத்துவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும் என அமித்ஷா உறுதியளித்த நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கு இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா கட்டுக்குள் வந்ததாக இல்லை. இந்நிலையில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு குறைந்து உள்ளதாக தெரிகிறது. 
 
எனவே, மருத்துவர் கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதேபோல மருத்துவர்கள் பலர் கருப்பு நிற பேண்ட் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர் என தெரிகிறது.  
 
இந்நிலையில், இந்திய மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவருடன் அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் காணொலியில் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும். எனவே அடையாள போராட்டத்தை கைவிடுங்கள் என அமித்ஷா கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மருத்துவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும் என அமித்ஷா உறுதியளித்த நிலையில் போராட்டம் வாபஸ் பெறுவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.