பெண்களுக்கு மாசம் ரூ.2500.. வேலையை துவங்கிய முதல்வர் விஜய்!..
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த போது இரண்டரை வருடங்கள் கழித்து மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுக்கப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரிமைத்தொகை 2 ஆயிரமாக உயர்த்தி கொடுக்கப்படும் என முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார்..
ஒருபக்கம், தவெக பிரச்சாரத்தில் பேசிய கட்சியின் தலைவர் விஜய் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மாதம் ஆயிரம் ரூபாய் தொகை தவெக ஆட்சிக்கு வந்தால் 2500ஆக உயர்த்தி கொடுக்கப்படும் என அறிவித்தார். தற்போது தவெக ஆட்சிக்கு வந்துவிட்டது.. விஜய் முதல்வராக மாறியிருக்கிறார்.. எனவே 2500 பெண்களுக்கு எப்போது கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு பெண்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில்தான் இன்று பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. மேலும், உரிமை தொகை மறுசீரமைக்கப்பட்டு வருவதாக முதல்வர் விஜய் நேற்று கூறியிருந்தார்
. அதாவது 60 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதம் 2500 எனவும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.3000 வழங்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அதன்படி, உதவித்தொகை பெறும் பெண்களில் 60 வயது வரை உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. எல்லா வேலையும் சரியாக முடிந்தால் அடுத்த மாதமே இந்த 2500 பெண்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..