வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (14:25 IST)

மங்களகரமான நாட்களில் பதிவு செய்ய கூடுதல் கட்டணம்! – முதன்மை செயலர் கடிதம்!

தமிழகத்தில் மங்களகரமான நாட்களில் பதிவுத்துறை செயல்பட கூடுதல் கட்டணம் வசூலிக்க முதன்மை செயலர் அனுமதி அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பத்திர பதிவுத்துறை செயல்பட்டு வரும் நிலையில், மங்களகரமான சித்திரை முதல் நாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் பலர் சொத்து பதிவுகளை நடத்த விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் மங்களகரமான நாட்களில் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படுவது குறித்து தமிழக முதன்மை செயலர் பீலா ராஜேஷ் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் பதிவுத்துறையின் ஆலோசனையை ஏற்பதாகவும் மங்களகரமான ஆடிப்பெருக்கு, சித்திரை முதல் நாள், தைப்பூசம் ஆகிய நாட்களில் பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்கலாம். மேலும் அத்தையக நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.