கோவை ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும்! – தெய்வத் தமிழ் பேரவை கோரிக்கை!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (12:42 IST)
கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா மையத்தை அரசுடமையாக்க வேண்டும் என தெய்வத் தமிழ் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இந்து கோவில்களை அறநிலையத்துறையிடம் இருந்து கைப்பற்றி மீண்டும் பக்தர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தெய்வத் தமிழ் பேரவை பத்திரிக்கை சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய தெய்வத் தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் பே.மணியரசன் ”ஜக்கி வாசுதேவின் அறநிலையத்துறையை கலைக்கும் முயற்சி ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் நோக்கங்களை ஒத்ததாக உள்ளது. மேலும் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா மையம் சட்டத்திற்கு புறம்பாக மலைப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர்களது வழிபாட்டு முறை தமிழ் சிவநெறி-திருமால் நெறிக்கு புறம்பாக உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. எனவே அவரது ஈஷா மையத்தை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :