பெரியார், அம்பேத்கர் படங்கள் அவமதிப்பு! – கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

Krishnakiri
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (11:43 IST)
கிருஷ்ணகிரியில் ஒட்டப்பட்ட பெரியார், அம்பேத்கர் படங்கள் மீது மர்மநபர்கள் அவமதிப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 14ம் தேதியான நாளை சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாளுக்கு மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கிருஷ்ணகிரியில் சுவர் ஒன்றில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் படங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்நிலையில் அந்த படங்கள் மீது சாணத்தை வீசி மர்ம நபர்கள் அவமரியாதை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :