வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (11:24 IST)

இவ்ளோ நாளா இதை எங்கய்யா வெச்சுருந்தீங்க! – செல்லாத ஆயிரம் ரூபாயுடன் சிக்கிய கும்பல்!

இந்தியாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சுமார் 5 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளோடு மூவர் பிடிப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நாடு முழுவதும் பணமதிப்பிழப்பை அறிவித்தார் பிரதமர் மோடி. இந்நிலையில் கடந்த ஆண்டில் பலர் தங்களிடம் இருந்த 500, 1000 ரூபாய்களை அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றிக் கொண்டனர்.

இந்நிலையில் செங்கல்பட்டை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி வரலட்சுமி தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் ஏராளமான பழைய 1000 ரூபாய் நோட்டுகள் இருந்த நிலையில் அவற்றை மாற்றி தர காளையார்கோவில் பகுதியை சேர்ந்த அருள் சின்னப்பன் என்பவர் உத்வியை நாடியுள்ளார்.

இதுகுறித்து காளையார்கோவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில் ரகசியமாக நோட்டமிட்ட போலீஸார் வரலட்சுமி, அவர் தம்பி அசோக்குமார் மற்றும் அருள் சின்னப்பனை மடக்கி பிடித்துள்ளனர். அவர்களிடமிருந்து 4.80 கோடி மதிப்புள்ள பழைய 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.