பெரியார் ஈ.வே.ரா சாலை பெயர் மாற்றம்! – பெரியாரிய ஆதரவாளர்கள் அதிர்ச்சி!

EVR Road
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (11:00 IST)
சென்னையில் உள்ள பெரியார் ஈ.வே.ரா சாலையின் பெயரை தமிழக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் முத்துசாமி பாலத்தில் தொடங்கி மதுரவாயல் சந்திப்பு வரை தொடரும் 14 கிமீ நீளமுள்ள பிரதான சாலை பூத்தமல்லி ஹை ரோடு என்றும், பெரியார் ஈ.வே.ரா சாலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. சென்னையின் முக்கிய பிரதான சாலையான இந்த சாலையின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி பெரியார் ஈ.வே.ரா சாலை Grand Western Trunk Road என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தமிழக நெடுஞ்சாலை துறை இணையதளத்தின் ஸ்க்ரீன்ஷாட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், இந்த பெயர் மாற்றத்திற்கு பெரியாரிய ஆதரவாளர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :