1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Red alert warning for Tamil Nadu tomorrow

மக்களே உஷார்: தமிழகத்திற்கு நாளை ரெட் அலர்ட்!!

தமிழகம்
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்திற்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனுடன் தற்போது வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகுவதால் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
மழைக்கு வெப்ப சலனமும் ஒரு காரணமாக இருந்தாலும், அரபிக்கடலில் 55 கிமீ வேகத்தில் காற்றுவீசும் என்பதால் மீனவர்கள் 2 நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது, தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்திற்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

ரெட் அலர்ட் என்பது தமிழகம் முழுவதும் அல்ல குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே. அதேபோல் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவையில் நாளை மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டியளித்துள்ளார்.
About Writer
Sugapriya Prakash