திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2019 (14:19 IST)

அண்ணே, அழகிரி அண்ணே!! எல்லாம் பேச்சே... தொண்டர்களால் கடுப்பில் தலைமை!!

திமுக-வை விமர்சித்து அழகிரி ஆதரவாளர்கள் சிலர் போஸ்டர் ஒட்டியுள்ளது மதுரை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
முக அழகிரி திமுகவில் தென் மண்டல் அமைப்பு செயலாளராக் செல்வாக்காக இருந்தவர். இப்படி இருந்தவரை திடீரென கருணாநிதி கட்சியை விட்டு நீக்கினார். இதன் பின்னர் திமுகவில் இருந்து விலகியே இருந்த அழகிரி, கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் திமுகவில் இணை விருப்பம் தெரிவித்தார். 
 
திமுக தலைவர் ஸ்டாலின், தன்னை கட்சிக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால், ஸ்டாலின் இவை எதையுமே கண்டுக்கொள்ளவில்லை. அதன் பின்னர் அழகிரி தனிக்கட்சி துவங்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. 
தனக்கென தனி ஆதரவாளர்கள் சிலர் இருந்தாலும் அமைதி காத்து வருகிறார் அழகிரி. இந்நிலையில், அழகிரி ஆதரவாளர்கள் சிலர், திமுகவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அந்த போஸ்டரில், அண்ணே அண்ணே அழகிரி அண்ணே நம்ம கட்சி நல்ல கட்சி, மதுரையில இப்போ ரொம்ப கெட்டுப் போச்சுன்னே என தங்களது ஆதங்கத்தை வெளியிப்படுத்தியுள்ளனர். ஆனால், இது திமுக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.