செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2019 (13:08 IST)

கிருஷ்ணரை எதிர்க்கட்சிகள் திட்டுனப்போ எங்க போனீங்க? – அதிமுக அமைச்சருக்கு சப்போர்ட்டாக எச்.ராஜா!

இஸ்லாமியர்களை அவதூறாக பேசியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்தவர்களை விமர்சித்து பதிவிட்டுள்ளார் எச்.ராஜா

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்களை அவதூறாக பேசியதாக வெளியான செய்தி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் இஸ்லாமியர்களை அவதூறாக பேசவில்லையென்றும், தன்னிடம் பேசவந்த ஒரு இஸ்லாமிய அமைப்பினர் தரகுறைவாக பேசியதாகவும், அவர்களைதான் தான் விமர்சித்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்களை அவமதித்து விட்டதாக முஸ்லீம் அமைப்புகள் சில அவருக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டி வருகின்றன. அதுபோல பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் ஊரான காரைக்குடியிலும் இதுப்போன்ற கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள எச்.ராஜா ” பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும், பகவத்கீதையையும் திக,திமுக, காங்கிரஸ், திருமாவளவன் கும்பல் இழிவாக பேசிய போது இந்த இழி ஜென்மங்கள் எங்கே போனார்கள். திரு. இராஜேந்திர பாலாஜி எந்த ஒரு மதத்தின் கடவுளையோ, புனித நுலையோ இழிவாக பேசவில்லை.கிறித்தவ, முஸ்லீம் ஓட்டு வியாபாரிகளை மட்டுமே விமரிசித்தார்” என்று கூறியுள்ளார்.