1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Red alert to nellai district

நெல்லை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு

rain
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதையடுத்து நெல்லை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
 
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து இன்னும் அதிக மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
 
இதனையடுத்து நெல்லை மாவட்ட நிர்வாகம் மழை நீர் தேங்கி இருந்தால் அல்லது மழை காரணமாக ஏதேனும் சேதம் ஏற்பட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது
 
 மேலும் தாலுகா வாரியாக மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்
 
 நெல்லை மாவட்டத்தில் சேதம் குறித்த கட்டுப்பாட்டு அறை எண்கள் 1070,  0462 501012 ஆகும்
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
செஸ் ஒலிம்பியாட் போட்டி: திடீரென மயக்கமடைந்த ஸ்பெயின் நாட்டு பெண் நடுவர்!