1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 14 districts of TN to have rain

இன்று 14 மாவட்டங்களில் கனமழை!

தமிழகம்
இன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
குரங்கு அம்மை - அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்!