தொடர்புடைய செய்திகள்
- திருச்சி கிழக்கில் த்ரிஷா போட்டியா? ஜெயித்தால் அமைச்சர் ஆவாரா?
- தவெகவுடன் காங்கிரஸ் சேர்ந்திருந்தால் 30-40 எம்.எல்.ஏ கிடைச்சிருக்கும்.. ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை செய்த வேலை..
- எம்ஜிஆர் கூட செய்யாத சாதனையை முதல் தேர்தலில் செய்த விஜய்.. சொல்லி அடித்த தவெக..!
- 110 இடங்களில் 3 ஆயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம்!.. திமுக - தவெக இடையே இழுபறி!..
- தவெக முன்னிலை!.. விஜய் வீட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!. பரபர அப்டேட்..
ஊழல்.. போதைக் கலாச்சாரம்.. விஜய் மீது காட்டிய வெறுப்பு?.. திமுக தோல்வியடைய காரணங்கள்!..
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 104 இடங்களிலும், திமுக 68 இடங்களிலும், அதிமுக 62 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
அதாவது திமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 50 வருட கால அரசியல் அனுபவம் கொண்ட திமுகவை இரண்டு வருடங்களுக்கு முன் கட்சி தொடங்கிய விஜய் வீழ்த்தியிருக்கிறார். இது சாதாரணமான வெற்றி அல்ல என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.திமுகவுக்கு ஏன் மக்கள் ஆதரிக்கவில்லை என பார்ப்போம்..
2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்கள் பிரச்சனைகளை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது. அல்லது மக்கள் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்கிற உண்மையை உளவுத்துறையும், ஸ்டாலினை சுற்றி இருந்தவர்களும், அவரை வழிநடத்தியவர்களும் அவரிடம் சரியாக சேர்க்கவில்லை என்றும் சொல்கிறார்கள். எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று மட்டுமே அவரை நம்ப வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனாலே திமுக அரசின் மீது மக்களுக்கு இருந்த கோபமும், அதிருப்தியும் அவருக்கு தெரியாமலே போய்விட்டது என்கிறார்கள்.
வாரிசு அரசியல், எல்லா துறைகளிலும் கடுமையான் ஊழல்..
அரசு அதிகாரிகளுக்கு கொடுப்பட்ட அதிகப்படியான அழுத்தங்கள்..
கஞ்சா உள்ளிட்ட போதைக் கலாச்சாரம் பெருகி பல குற்றங்கள் நடந்தது.
பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்தது..
தமிழக காவல்துறை அதிகாரிகள் யாருக்கும் கட்டுப்படாமல் தான் தோன்றித்தனமாக நடந்துகொண்டார்கள். எளிய மக்கள் மீது அடக்குமுறையை காவல்துறை காட்டியது. காவல் நிலையங்களில் பலரும் உயிரிழந்தனர். பொது இடங்களில் கூட போலீசார் அநாகரீகமாக நடந்துகொண்டனர். காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முக ஸ்டாலின் அவர்களை கட்டுப்படுத்தாமல் இருந்தது மக்களிடம் அதிருப்தியை கொடுத்தது.
கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போனது..
துப்புரவு தொழிலாளர்கள், உதவி மற்றும் இடை நிலை ஆசிரியர்கள் போராட்டங்களை கையாண்ட விதம்..
காவல்துறை அதிகாரிகளை வைத்து அவர்களின் போராட்டத்தை முடக்கியது..
கரூர் சம்பவத்தில் மொத்த பழியையும் தூக்கி விஜய் மீது போட்டது...
இது போன்ற பல காரணங்களால் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை மக்கள் கைவிட்டு இருக்கிறார்கள் என புரிந்து கொள்ளலாம்..
குறிப்பாக தமிழக முழுவதும் இளைஞர்களிடம் கஞ்சா பழக்கம் அதிககிறது. 15 வயதிற்கு மேற்பட்ட பல இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட பல போதைபொருட்களுக்கு அடிமையாக மாறியிருக்கிறார்கள். இதனால் பல குற்றங்களும் நடந்தது. ஆனால் முதல்வர் பதவியில் இருந்த முக ஸ்டாலின் இதையெல்லாம் சீரியஸாக பார்க்கவே இல்லை. இதற்கெல்லாம் அவர் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் திமுகவை மக்கள் ஆதரித்திருப்பார்கள். ஆனால் அதை அவர் செய்ய தவறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்..
ஒருபக்கம் நடிகராக இருந்த அரசியல் துவங்கிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். திமுகவின் மீது மக்களுக்கு ஏற்கனவே அதிருப்தியிருந்த நிலையில் திமுக மீது விஜய் வைத்த விமர்சனங்கள் மக்களிடம் சுலபமாக சென்றடைந்தது. இதுவும் திமுக தோற்றுப் போக ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.. அதுவும் திமுக ஒரு தீயசக்தி என விஜய் சொன்னது செல்போன் மூலம் பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்தது.
அதோடு புதிய வாக்காளர்களும், இளைஞர்களும், பெண்களும், பொதுமக்களில் பலரும் கூட விஜயின் விசில் சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர். குறிப்பாக கடந்த பல வருடங்களாகவே திமுகவுக்கு வாக்களித்து வந்தார்கள் கூட தற்போது ஒரு மாற்றம் வேண்டி விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மையினர் ஓட்டுக்களும் கணிசமாக தவெகவுக்கு போய்விட்டது. இதுவும் திமுக தோற்றதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது..
மேலும், விஜயையும், அவரின் ரசிகர்களையும், தவெகவினரையும் திமுக ஆதரவாளர்களும், அக்கட்சியை சேர்ந்தவர்களும், திமுக ஐடி விங்கும் மிகவும் தரைக்குறைவாக சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள். அதை திமுக தலைமை கட்டுப்படுத்தாமல் ரசித்துக்கொண்டிருந்தது. இதுவும் திமுகவின் மீது மக்களிடம் அதிருப்தியை கொடுத்தது.
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்.. தேர்தலுக்கு முன் 5 ஆயிரம் கொடுத்திருக்கிறோம்.. அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம்.. அதோடு, ஓட்டுக்கு பணம் கொடுத்துவிட்டால் இந்த முறையும் மக்கள் நமக்கு வாக்களித்துவிடுவார்கள் என திமுக கணக்குப்போட்டது. அந்த அதீத நம்பிக்கைதான் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைய காரணமாக மாறியிருக்கிறது.