1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. three thousand votes only difference between dmk and tvk

110 இடங்களில் 3 ஆயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம்!.. திமுக - தவெக இடையே இழுபறி!..

vijay stalin
நடிகர் விஜய் துவங்கிய தவெக தமிழக அரசியலில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இளைஞர்கள் இந்த கட்சிக்கு ஆதரவாக நின்றார்கள். ஒருபக்கம், கட்சி துவங்கியது முதலே திமுகவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் விஜய். குறிப்பாக இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டும்தான் போட்டி. ஒன்னு தவெக.. இன்னொன்னு திமுக என விஜய் பேசியது பெரிய எழுச்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரிடமும் வாக்குகளை கேட்டார் விஜய். விசில் புரட்சியை ஏற்படுத்துங்கள் எனத் தொடர்ந்து பிரச்சாரங்களில் பேசினார்..

விஜய் எல்லா தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும் சென்ற தொகுதிகளில் சிறப்பாகவே பேசி தவெகவுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார்.
எப்படியும் விஜய் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்குவார் என பலரும் சொன்னார்கள். இந்நிலையில்தான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை தற்போது எண்ணப்பட்டு வருகிறது..

தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளில் தவெக 104 தொகுதிகளிலும், திமுக 67 இடங்களிலும், அதிமுக 63 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. எனவே விஜய் ஆட்சி அமைப்பார் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. அதேநேரம் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்பதால் இன்னும் 12 தொகுதிகளில் தவெக வெற்றி பெற வேண்டும்.

அப்படி இல்லையெனில் அதிமுகவோடு இணைந்து தவெக ஆட்சி அமைக்க வேண்டும். இதில் எது நடக்கும் என்பது தெரியவில்லை. விஜய் தனிமஜாரிட்டே பெறுவாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அதேநேரம் 110 இடங்களில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே 3 ஆயிரம் வாக்குகளில்தான் இழுபறி நீடித்து வருகிறது. அதில், பல தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றால் கண்டிப்பாக விஜய் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
எம்ஜிஆர் கூட செய்யாத சாதனையை முதல் தேர்தலில் செய்த விஜய்.. சொல்லி அடித்த தவெக..!