1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. kerala governor announce three days leave to girls

பள்ளி மாணவிகளுக்கு மாதத்தில் 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை!.. கேரள ஆளுநர் அறிவிப்பு...

girl
கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. எனவே, காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீசன் கேரள முதலமைச்சராக மாறியிருக்கிறார். இந்நிலையில், புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் கொள்கைகள் தொடர்பாக கேரள சட்டசபையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் ‘மாணவிகள் நலனுக்கான எங்களின் உறுதிப்பாட்டை மாதவிடாய் கண்ணியம் என்கிற திட்டத்தின் வாயிலாக காட்டவிருக்கிறோம். பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்குவதுடன், அப்போது விடுபட்ட பாடங்களை ஈடு செய்ய வார இறுதி நாட்களில் வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறினார்.

கேரள அரசின் இந்த அறிவிப்பு பெண்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இது போல எல்லா மாநிலங்களிலும் பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
தாத்தா விஜய்க்கு ஓட்டு போடுங்க!.. நீதிபதி சுவாமிநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!.