தொடர்புடைய செய்திகள்
- ராம் மோகன் ராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி!
- ராம மோகன ராவுக்கு மீண்டும் உயர் பதவி - தமிழக அரசு அறிவிப்பு
- பன்னீர் அரசை விழுங்க வந்த அலாவுதீனின் பூதம் - ராம் மோகன் ராவ்
- ஜெ.விடம் எதுவும் கேட்டதில்லை; என்னிடம் ஏன் கேள்வி? - சீறிய மு.க.ஸ்டாலின்
- ராம் மோகன் ராவை ஜெயலலிதா கொள்ளை அடிக்கச் சொன்னாரா? - சசிகலா புஷ்பா காட்டம்
சர்ச்சைகளில் சிக்கிய ராம் மோகன் ராவ் இன்று ஓய்வு...
முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் இன்று அவரது பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி, முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் இவருக்கும், பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது.
அதனால், அவரின் பதவி பறிக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதில் கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலாளராகப் பதவியேற்றார்.
அந்நிலையில், அவருக்கு மீண்டும் உயர் பதவி அளிக்கப்பட்டு, தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குனராக அவர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் இன்று அவரது பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
அடுத்த கட்டுரையில்
