வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sasikala
Last Modified: புதன், 28 டிசம்பர் 2016 (12:55 IST)

பன்னீர் அரசை விழுங்க வந்த அலாவுதீனின் பூதம் - ராம் மோகன் ராவ்

ஊழல்வாதிகளின் கடைசி வாதம் தான் இந்த மதம், தான் இந்த சாதி, தான் இந்த மாநிலத்தவன், தான் இந்த கட்சிக்காரன் ஆகவே இந்த அரசு பழி வாங்குகிறது என்பது. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக முன்னாள்/இந்நாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஊழலுக்கு எதிரான தன் மீதான நடவடிக்கை இருந்திருக்காது என்கிறார்.


 
மௌன குரு
 
ராம் மோகன் ராவ், செயல்படாத ஒரு அரசு இது என்கிறார் ஓபிஎஸ்  அரசை. ஆனால் நம் மௌன குரு, மீண்டும் மௌனமாய். முதல்வரின் புதிய காவலாளிகள் முதல்வர் விளக்கம் தர தேவை இல்லை என்கிறார்கள். துணை ராணுவத்துடன் வருமான வரி/சிபிஐ அதிகாரிகள் தலைமை செயலகத்துக்கு என்ன காப்பி சாப்பிடவா வந்தார்கள்? முதல்வர் பேச வேண்டியது இல்லை என்கிறார்கள்.  இது பேசாத அரசா என்ன? ஆம்! நான்தான் துணை ராணுவத்துடன் வருமான வரி/சிபிஐ  அதிகாரிகள் தலைமை செயலகம் வர அனுமதி கொடுத்தேன் என்று சொல்ல நமது முதல்வருக்கு துணிச்சல் உண்டா என்ன? 
 
வாய் மூடி மௌனி அரசு
 
கரூர் அன்பு நாதன், நத்தம் விஸ்வநாதன், ரெட்டிகள் என தொடங்கி லோதா வரை சில அதிகாரிகளும் அமைச்சர்களும் சங்கிலி தொடராய், ஊழல் பணப்பரிவர்த்தனைகள் செய்து இருக்கிறார்கள். அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த சங்கிலி தொடரின் ஒரு லோடுதான் நம் மாண்புமிகு பன்னீர். அவர் எப்படி பேசுவார்? ஜனநாயகத்தில் கேள்வி கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் பன்னீர் போன்ற கனவான்களிடம் பதில் மட்டும் வராது. முதல்வர் ஜனநாயகத்திற்கு அப்பாற்ப்பட்டவரா என்ன கோடி கோடியாய் ஊழல் நடந்து இருக்கிறது. இது வரை இந்த மத்திய அதிகாரிகள் எங்கு சென்றார்கள் ? 
 
ஊழல்தானே நடக்கட்டும், நடக்கட்டும்.  நம் தமிழகத்தில் தானே நடக்கட்டும், நடக்கட்டும் என்று விட்ட அதிகாரிகள்/மத்திய தலைமையும் என்ன செய்வது? நேற்று நிருபர் ஒருவர் ராம் மோகன் ராவ்விடம் சேகர் ரெட்டிக்கு உள்ள தொடர்பை கேட்கிறார். அதே நிருபர், மாண்புமிகு முதலமைச்சரிடம் ராம் மோகன் ராவ்விடம் கேட்ட அதே கேள்வியை கேட்க முடியுமா என்ன? அவர் கேட்டாலும் பதில் சொல்ல நம் முதல்வர் என்ன பழைய பன்னீரா என்ன? அவர் புதிய சின்ன ஐயா ஆயிற்றே.
 
அலாவுதீன் விளக்கை தேய்த்தவுடன் கிளப்பிய பூதம் போல, நடராஜன் மோகன் ராவ் என்ற பூதத்தை கிளப்ப செய்து இருக்கிறார், இந்த பூதம் சொல்வதை மட்டும் அல்ல, அவரது அரசையும் நிச்சயம் விழுங்கும்.

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர்