1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2016 (17:49 IST)

ராம் மோகன் ராவை ஜெயலலிதா கொள்ளை அடிக்கச் சொன்னாரா? - சசிகலா புஷ்பா காட்டம்

வருமான வரிச் சோதனையில் சிக்கிய ராம் மோகன் ராவ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


 

 
அப்போது தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், ஜெயலலிதாவிடம் தான் பயிற்சி பெற்றதாகவும், ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால், வருமான வரித்துறையினர் என்னை நெருங்கியிருக்க முடியுமா என்றெல்லாம் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தன்னை காக்க தமிழக அரசு தவறி விட்டதாகவும் அவர் புகார் கூறினார்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா “ ராம் மோகன் ராவ் தவறாக பேசியிருக்கிறார். தேவையில்லாமல் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை எல்லாம் இழுக்கிறார். ஜெயலலிதாவா அவரை ஊழல் செய்ய சொன்னார்?. பத்திரிக்கையாளர்களிடம் பேசுவதற்கு இவர் யாரிடம் அனுமதி பெற்றார்? 
 
எல்லாம் தவறும் இவர் செய்துவிட்டு தமிழக அரசை குறை கூறுகிறார். சேகர் ரெட்டியை தெரியவே தெரியாது என அப்பட்டமாக பொய் சொல்கிறார்.  இவருக்கு பின்னால் ஒரு பெரிய கும்பலே இருக்கிறது.
 
சசிகலா குடும்பத்தினர் பல்வேறு வகையில் சொத்து குவிக்க, சேகர் ரெட்டி மூலம் இவர் உதவியுள்ளார் என மக்கள் பேசிக் கொள்கிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகள் எங்கு வேண்டுமானாலும் சோதனை செய்வார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.
 
தற்போது முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அரசு நன்றாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.