தொடர்புடைய செய்திகள்
- இரண்டாவது வாரமாக தொடர்ந்து சரியும் தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு அதிகம்! – வானிலை ஆய்வு மையம்!
- கட்சி தொடங்க துடிக்கும் தொண்டர்கள்; அதிருப்தியில் ரஜினி! – பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பா?
- மகனின் தோழியை திருமணம் செய்த தந்தை! – சொத்து தராததால் வெட்டிக் கொன்ற மகன்!
- டிச. 31 வரை பொது முடக்கம்: இம்முறை வழங்கப்பட்ட தளர்வுகள் என்ன?
ரஜினி என்ன சொன்னாலும் அதை செய்வோம்! – நாளைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் ரஜினி தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த நிலையில் நாளைக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மன்ற நிர்வாகிகளோடு இன்று கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதில் கட்சி தொடங்குவது குறித்து நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட ரஜினிகாந்த், சில நிர்வாகிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என கூறியுள்ளதோடு இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருப்பதன அவசியத்தையும் எடுத்து கூறி விரைவில் கட்சி குறித்து அறிவிப்பதாகவும், அதுவரை பொறுமை காக்குமாறும் கூறியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகத்தினர் “ரஜினி அரசியல் கட்சி குறித்து என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு நடப்போம். ரஜினி தனது முடிவு குறித்த முக்கிய அறிவிப்பை இன்று மாலையோ அல்லது நாளை காலையோ வெளியிடுவார்” என கூறியுள்ளனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
