இரண்டாவது வாரமாக தொடர்ந்து சரியும் தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!

gold
Prasanth Karthick| Last Updated: திங்கள், 30 நவம்பர் 2020 (11:41 IST)
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது.  

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது.  
 
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.4,524-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
இந்த வாரம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அதாவது 6 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,792 அளவுக்கு விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :