செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2020 (12:47 IST)

அரசியல் பிரவேசம் எப்போது? நழுவும் ரஜினி !

அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன் என ரஜினிகாந்த் தகவல். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மன்ற நிர்வாகிகளோடு இன்று கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதில் கட்சி தொடங்குவது குறித்து நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட ரஜினிகாந்த், சில நிர்வாகிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என கூறியுள்ளதோடு இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருப்பதன அவசியத்தையும் எடுத்து கூறி விரைவில் கட்சி குறித்து அறிவிப்பதாகவும், அதுவரை பொறுமை காக்குமாறும் கூறியதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்து தற்போது ரஜினிகாந்த், அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரஜினியிடம் இருந்து விரைவில் அறிக்கை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.