தொடர்புடைய செய்திகள்
- 6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு: தேர்வு அட்டவணை இதோ..!
- சிஎஸ்கே அணி அபார வெற்றி. ஆனாலும் லக்னோ தான் புள்ளிப்பட்டியலில் டாப்.. எப்படி?
- ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த தோனி
- ஏப்., 7ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- கலாஷேத்ரா கல்லூரி பருவத்தேர்வு தேதி அறிவிப்பு.. சென்னை திரும்பும் மாணவிகள்..!
இன்னும் 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை: இந்திய வானிலை ஆய்வு மையம்..!
இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் நாடு முழுவதும் மழை பெய்யும் இடங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
நீலகிரி ஈரோடு புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவு வந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பம் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோடை மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
