1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (22:23 IST)

ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த தோனி

இந்தியாவில் 16 வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் தொடங்கி  நடந்து வரும் நிலையில்,  ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய போட்டியில், இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில்  7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்துள்ளது.

இப்போட்டியில், முன்னாள் கேப்டன் தோனி 12 ரன்கள் அடித்ததார். அவர் 8 ரன்கள் அடித்த போது,  ஐபிஎல் போட்டி வரலாற்றில்  5 ஆயிரம் ரன்கள் அடித்த 7 வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் .

இதற்கு முன்னதால விராட் கோலி(6706) ரன்கள், தவான்( 6284 ரன்கள்), வார்னர் (5937 ரன்கள்), ரோஹித் சர்மா ( 5880 ரன்கள் ), ய்னா 5528 ரன்கள்) டிவில்லியர்ஸ்( 5126 ரன்கள்)  ஆகியோர் வரிசையில் தோனி இணைந்துள்ளார்.

இதுவரை தோனி(41) தலைமையில்ம் 4 முறை சென்னை கிங்ஸ் கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.