ஏப்., 7ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வரும் 7ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோரை தொடர்ந்து பல போராட்டங்களைக் கடந்து, அதிமுகவின் பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
எடப்பாடி பழனிசாமி கட்சியில் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
சமீபத்தில், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்ட நிலையில் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், வரும் 7ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் உசேன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.