தொடர்புடைய செய்திகள்
- நாளை முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.. தமிழக அரசு எச்சரிக்கை
- விபத்தில் உயிரிழந்தவரை வேடிக்கை பார்த்த அரசு ஊழியர் திடீர் மரணம்!
- புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் மோதல்: சிறை வார்டன் கோமளா மீது தாக்குதல்!
- மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. கிராம் ரூ.5050ஐ நெருங்கியது
- இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு: மீண்டும் தொடர் மழையா?
இன்னும் ஒரு மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்தம் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் காஞ்சிபுரம் திருவள்ளூர் திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருநெல்வேலி தென்காசி சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நாளை மறுநாள் முதல் அதாவது டிசம்பர் 7ஆம் தேதி முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
