1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Siva
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2022 (11:08 IST)

புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் மோதல்: சிறை வார்டன் கோமளா மீது தாக்குதல்!

puzhal
சென்னை புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் ஒருவரோடொருவர் மோதிக் கொண்ட நிலையில் அவர்களை தடுக்க சென்ற சிறை வார்டன் தாக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை புழல் சிறையில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் கைதிகள் அதாவது இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. 
 
உணவுக்காக வரிசையில் நிற்கும்போது வெளிநாட்டு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற சிறை வார்டன் கோமளா என்பவர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது 
 
இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை புழல் சிறையில் சிறை வார்டன் ஒருவர் வெளிநாட்டு கைதிகளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva