திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2022 (11:57 IST)

விபத்தில் உயிரிழந்தவரை வேடிக்கை பார்த்த அரசு ஊழியர் திடீர் மரணம்!

accident
சென்னை போரூர் அருகே அரசு ஊழியர் ஒருவர் விபத்தில் பலியானதையடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு அரசு ஊழியர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை போரூர் அருகே அரசு ஊழியர் யோவான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவரது வாகனம் விபத்தில் சிக்கியது. இதனால் யோவான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
 
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அப்போது விபத்தில் பலியானவரை பார்த்துக் கொண்டே இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்த தங்கராஜ் என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரும் ஒரு அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 ஒரே இடத்தில் இரண்டு வெவ்வேறு விபத்துக்கள் நடந்து இரு அரசு ஊழியர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Edited by Mahendran