திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 25 ஜூலை 2024 (06:57 IST)

ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிட்டதே தமிழக அரசுதான்: மத்திய அமைச்சர்..!

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு தான் என மத்திய அமைச்சர் அதிரடியாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டமும் மத்திய பட்ஜெட்டில் இல்லை என்று தமிழக முதல்வர் உள்பட தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் கடந்த 2009 - 14ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டு ரயில்வே மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.879 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் 6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இது முந்தைய ஆட்சியை விட ஏழு மடங்கு அதிகம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் வழங்கும் பணிகளில் சுணக்கம் உள்ளதாகவும் மாநில அரசுகள் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இருபக்கமும் பயன்பாடு இருக்கும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை ராமேஸ்வரம் - தனுஷ்கோடி திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் ஆனால் நிலம் எடுப்பு பிரச்சனையால் இந்த திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு அரசு தான் கடிதம் எழுதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அம்பாசமுத்திரம், அம்பத்தூர், சென்னை கடற்கரை, எழும்பூர், பூங்கா, சிதம்பரம், மதுரை, கோவில்பட்டி, ராமேஸ்வரம், திருநெல்வேலி உள்ளிட்ட 77 ரயில் நிலையங்கள் அம்ரித் ரயில் நிலையங்களாக மாற்றப்பட்ட உள்ளது என்றும் இது எல்லாம் தமிழ்நாட்டுக்கு செய்யப்படும் ரயில்வே திட்டங்கள் என்றும் அவர் பட்டியலிட்டார்.

Edited by Siva