ஞாயிறு, 8 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஜூலை 2024 (17:37 IST)

'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி: தமிழ்நாடு அரசு உத்தரவு..!

தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களாகவே தமிழக  திரையரங்குகளில் அதிகாலை காட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் 9 மணி முதல் தான் முதல் காட்சி திரையிடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது. 
 
இருப்பினும் பிரபலங்களின் படங்களுக்கு மற்றும் ஐந்து காட்சிகள் திரையிட தமிழக அரசு அவ்வப்போது அனுமதி வழங்கி வரும் நிலையில் தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படத்திற்கு தற்போது சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி உள்ளது.
 
நாளை மறுநாள் காலை 9 மணி தொடங்கி அதிகாலை 2 மணி வரை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து 'ராயன்' படம் ஐந்து காட்சிகள் நாளை மறுநாள் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran