புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 10 டிசம்பர் 2025 (15:27 IST)

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் கடந்த 2015 முதல் 2025 வரை சுமார் 10 ஆண்டுகளாக ரூ.54 கோடி மதிப்புள்ள மாபெரும் பட்டு சால்வை கொள்முதல் மோசடி நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
 
தேவஸ்தானத் தலைவர் பி.ஆர். நாயுடுவின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு ஒப்பந்ததாரர் உயர்தரமான மல்பெரி பட்டுக்கு பதிலாக, மலிவான 100% பாலியஸ்டர் சால்வைகளை விநியோகம் செய்து பட்டுக்கான தொகையை பெற்று வந்தது கண்டறியப்பட்டது. சோதனையில் இது பாலியஸ்டர் என்று உறுதி செய்யப்பட்டது.
 
"ரூ.350 மதிப்புள்ள சால்வைக்கு ரூ.1,300 பில் செய்யப்பட்டுள்ளது. இதனால் தேவஸ்தானத்திற்கு ரூ.50 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று தலைவர் நாயுடு தெரிவித்தார். 
 
உடனடியாக, இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், முழு விவகாரமும் விரிவான குற்றவியல் விசாரணைக்காக ஆந்திர மாநில ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
Edited by Siva