அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியல் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பல மாதங்களுக்கு முன்பே அதிமுகவுக்கு பிரச்சாரத்தை துவங்கிவிட்டார்.
எல்லா தொகுதிகளுக்கும் சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுகவை மிகவும் கடுமையாகவும் விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில்தான் இன்று அதிமுக பொதுக்குழு கூடியது. அதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் அவர்களே.. அன்றைக்கு சட்டையை கிழித்து கொண்டு வெளியே வந்தீர்கள்.. ஆனால் 2026 தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பன்மையுடன் ஆட்சி அமைக்கும். அப்போது நீங்கள் எந்த நிலையில் இருப்பீர்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை.
திமுக ஆட்சியில் எல்லாவற்றிலும் ஊழல். செந்தில் பாலாஜி மீது வழக்கு இருக்கிறது. இப்போது இன்னொரு அமைச்சர் சிக்கியிருக்கிறார். இப்படி ஒவ்வொரு அமைச்சராக சிறைக்குப் போவார்கள். இன்னும் தேர்தல் நெருங்குவதற்குள் பெரும்பாலான அமைச்சர்கள் சிறைக்கு சென்று விடுவார்கள். 2026 தேர்தலில் 100 சதவீதம் நாங்கள் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நாமும் தேர்தல் பொறுப்பாளரை வைத்திருக்கிறோம். 210 தொகுதிகளில் வெல்வோம்.
43 சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சம் வாக்குகளால் நாம் ஆட்சியை இழந்தோம். பல தேர்தலில் தனி தனிப்பெரும்பான்மை பெற்ற அதிமுக பற்றி தெரியாமல் ஸ்டாலின் உளறிக் கொண்டிருக்கிறார். திமுகவை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். அதன்பின் ஜெயலலிதா பல சோதனைகளை தாங்கி கழகத்தை கட்டி காத்தார். இரு தலைவர்களும் பலதரப்பட்ட மக்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்தார்கள் என பேசினார்.