1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. raghava lawrene sharing rajinikanth info

எனக்கு கூட பதவி வேணாம்!. நல்லா படிச்ச ஒருத்தர கொண்டுவர ஆசைப்பட்டேன்!.. ராகவா லாரன்ஸிடம் சொன்ன ரஜினி

ragava lawrence
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். பல வருடங்களாகவே சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் இவரிடம்தான் இருக்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் 25 வருடங்களாக எதிர்பார்த்தார்கள். அவரும் சினிமாவில் மறைமுகமாகவும், நேரடியாகவும் அரசியல் தொடர்பான வசனங்களையும் காட்சிகளையும் வைத்தார்.
 
சினிமா விழாக்களிலும் பேசும் போது ‘நான் அரசியலுக்கு வருவதை முடிவு செய்ய வேண்டியது காலம்தான்’ என தொடர்ந்து சொல்லி வந்தார். ஒரு கட்டத்தில் தன் அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி கொரோனா காலத்தில் தனது உடல்நலம் பாதிக்கப்பட்டதை காரணமாக காட்டி அதிலிருந்து பின்வாங்கினார்..
 
இந்நிலையில்தான், ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் ரஜினி பற்றிய ஒரு முக்கிய தகவலை சொல்லியிருக்கிறார். ரஜினி சார் அரசியலில் இருந்து பின் வாங்குவதாக அறிவித்த அந்த சமயத்தில் நான் அவரை நேரில் போய் பார்த்தேன். அப்போது உடம்பு ஒத்துழைக்கவில்லை.. என்னை வாழ வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை.. எனக்கு கூட பதவி வேண்டாம்.. நல்லா படிச்சா ஒருத்தரை கொண்டு வரணும்னு ஆசைப்பட்டேன்’ எனவும் ரஜினி சார் என்னிடம் சொன்னார்’ என அவர் கூறியிருக்கிறார்..