தொடர்புடைய செய்திகள்
- எனக்கு கூட பதவி வேணாம்!. நல்லா படிச்ச ஒருத்தர கொண்டுவர ஆசைப்பட்டேன்!.. ராகவா லாரன்ஸிடம் சொன்ன ரஜினி
- அரசியலுக்கு வர முடியல!.. என்ன வாழவச்ச மக்களுக்கு!.. உள்ள குத்துது கண்ணா!.. லாரன்ஸிடம் சொன்ன ரஜினி!..
- நீங்க சொன்னா நான் அரசியலுக்கு வரேன்!.. லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ!...
- பார்க்கிங் பட இயக்குனரை கைவிட்ட ரஜினி, எஸ்.கே!.. கை கொடுத்த சிம்பு!..
- இப்ப சொல்ல முடியாது!.. அறிவிப்பிலிருந்து பின் வாங்கிய ராகவா லாரன்ஸ்!..
சீமான் மீது கோபம் இருந்தது!. ஆனால் ஒரு நாள்!.. ராகவா லாரன்ஸ் சொன்ன பிளாஷ்பேக்...
ரஜினியின் தீவிர ரசிகர் நடிகர் ராகவா லாரன்ஸ். சிறுவயதில் ரஜினி முன்பு லாரன்ஸ் நடனமாடி காட்ட அவரை பிபுதேவாவிடம் சேர்த்து விட்டார் ரஜினி. இப்படித்தான் சினிமாவில் ராகவா லாரன்ஸின் கலைப்பயணம் துவங்கியது. படிப்படியாக வளர்ந்து தற்போது ஒரு பிரபலமான நடிகராக, இயக்குனராக மாறியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
இந்நிலையில், தான் அரசியலுக்கு வருவது தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ் ரஜினி சார் அரசியலுக்கு வருகிறேன் என சொன்னபோது அவருடன் இணைய ஆசைப்பட்டேன்.. ஆனால், என் அம்மா என்னை தடுத்தார்.. தற்போது விஜய் சார் சாதித்து காட்டியதும் என் அம்மாவுக்கு ஒரு நம்பிக்கை வந்துவிட்டது. நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்கிற உங்கள் கருத்தை சொல்லுங்கள் என அதில் பேசியிருக்கிறார்.
மேலும் அந்த வீடியோவில் ரஜினி சார் அரசியலுக்கு வந்தபோது சீமான் அவரை கடுமையாக விமர்சித்தார். எனவே எனக்கு அவர் மீது கோபம் இருந்தது.. சில ஆடியோ விழாக்களில் நான் சீமானுக்கு எதிராக கருத்து தெரிவித்தேன்..
ஆனால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நான் ஜிகர்தண்டா படம் பண்ணிய போது படத்தை பார்த்த சீமான் செல்போனில் அழைத்து என்னை மிகவும் பாராட்டி பேசினார். அதேபோல் நான் செய்துவரும் உதவிகள் பற்றியும் பாராட்டி பேசினார்... கோவம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் என்று நான் தெரிந்து கொண்டேன் என சொல்லியிருக்கிறார்.
