நீங்க சொன்னா நான் அரசியலுக்கு வரேன்!.. லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ!...
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் பட என பல அவதாரங்கள் எடுத்தவர் ராகவா லாரன்ஸ். மேலும் சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். 20 வருடங்களுக்கு மேல் பல திருநங்கைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வாழ்வு கொடுத்திருக்கிறார். பல குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைகளையும் அவர் செய்திருக்கிறார்.
தற்போது விஜய் அரசியலுக்கு வந்து முதல்வராகிவிட்ட நிலையில் விரைவில் ராகவா லாரன்ஸ் தவெகவில் இணையப்போகிறார், திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிடப் போகிறார் என்கிற செய்தி கடந்த சில நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து ராகவா லாரன்ஸ் தற்பொழுது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் நான் 20 வருடங்களுக்கு மேல் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன்.. பலரிடமும் உதவி பெற்றுதான் அந்த உதவிகளை செய்தேன். ஒரு கட்டத்தில் எனது பணத்தை மட்டுமே வைத்து உதவிகளை செய்ய துவங்கினேன். இப்போது வரை அது தொடர்கிறது. நான் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற பேச்சு தற்போது எழுந்துள்ளது.. காலத்தின் சூழ்நிலை என்னை அதை நோக்கி தள்ளியிருக்கிறது. அரசியலுக்கு வரவேண்டும் என எப்போதும் நான் நினைத்தது இல்லை.
ஆனால், ரஜினி சார் அரசியலுக்கு வர முடிவெடுத்த போது அவருடன் இணை ஆசைப்பட்டேன். ஏனெனில் இப்போதே இவ்வளவு உதவி செய்கிறோம். அரசியலுக்கு வந்தால் அரசின் உதவியோடு 100 ஏக்கரில் ஒரு பக்கம் திருநங்கைகள், ஒருபக்கம் மாற்று திறனாளிகள், ஒருபக்கம் ஆதரவற்றவர்கள், ஒரு பக்கம் முதியவர்கள் என பலருக்கும் உதவி செய்ய முடியும் என்பதால் அரசியலுக்கு செல்ல முடிவெடுத்தேன். ஆனால் என் தாய்க்கு அதில் விருப்பமில்லை. அதோடு ரஜினி சாரும் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்டார்.
விஜய் சார் கட்சி துவங்கிய போதும் அந்த எண்ணம் எனக்கு வந்தது. அப்போதும் என் அம்மா என்னை தடுத்தார். ஆனால் விஜய் சார் வெற்றி பெற்று காட்டியதால் எங்க அம்மாவுக்கும் ஒரு நம்பிக்கை வந்து விட்டது. என்னை அனுமதித்துவிட்டார். எனவே நான் அரசியலில் ஈடுபடலாமா? உங்களுடைய கருத்து என்ன? என்பதை சொல்லுங்கள். அதை வைத்து நான் ஒரு முடிவு எடுக்கிறேன் என அதில் பேசியிருக்கிறார். மேலும், கடமையை செய்யவேண்டும்.. பலனை எதிர்பார்க்கக் கூடாது எனவும் அதில் பேசியிருக்கிறார்.
Do your duty sincerely, without expecting anything in return.
— Raghava Lawrence (@offl_Lawrence) June 12, 2026
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter… pic.twitter.com/VwPFjdaUqy
