செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2019 (16:56 IST)

குழந்தையை தத்தெடுத்து சுஜித் என பெயர் சூட்டுங்கள்..ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருச்சி நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் என்ற சிறுவனை, 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சடலமாக மீட்டனர். இதனை தொடர்ந்து சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஃபாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யபட்டது.

இந்நிலையில் சுஜித் மரணம் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். அதில், ”சுர்ஜித் மீண்டு வருவான், அவரது பெற்றோருக்கு எனது வேண்டுகோள், ஒரு குழந்தையை தத்தெடுத்து சுஜித் என பெயர் சூட்டுங்கள். அதன் மூலம் ஒரு குழந்தைக்கு வாழ்க்கை கொடுத்ததாக இருக்கட்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அந்த குழந்தையின் படிப்பு செலவையும் முழுவதுமாக ஏற்றுகொள்கிறேன் என கூறியுள்ளார்.