1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (14:37 IST)

சுஜித் மரணம்... இது இரு தேவை இல்லாத உயிரிழப்பு " - லதா ரஜினிகாந்த் !

திருச்சி அருகே நடுக்கல் பட்டியைச் சேர்ந்த சிறுவன் சுர்ஜித் ( 2 வயது). கடந்த 25 ஆம் தேதி, வீட்டில் அருகே இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான். இதற்கு தமிழக அரசு அத்துணை பெரிய தீவிர முயற்சிகள் எடுத்தும் முயற்சி பலனளிக்காமல் இன்று அதிகாலை 2:  30 மணி அளவில் சுஜித் உயிரிழந்தான். இதற்கு நாட்டின் அனைத்துத் தரப்பினரும் சுர்ஜித் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் லதா ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
 
அவர் கூறியதாவது :
 
ஆழ்துளை கிணற்றிலிருந்து சுஜித் மீண்டு  வர வேண்டிமென்பதே அனைவரின் எண்ணமான இருந்தது. சுஜித்தின் மரணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இது ஒரு தேவையில்லாத உயிரிழப்பு ஆகும்.
 
சுஜித் நம் அனைவரையும் சாதி மதம் பார்க்காமல் ஒன்றிணைத்தான். பாதுகாப்பின்றி குழந்தைகள் விளையாட பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. குழந்தைகள் நலத்திற்காக அனைவரும் ஒன்றினைந்து வாருங்கள் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் தனது டுவிட்டர் பக்கதில் கூறியுள்ளதாவது :

சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். என தெரிவித்துள்ளார்.